Tuesday 5 July 2011

உலகப்போர்- 1


1914 ம் ஆண்டு ஜூன் 28 ம்தேதி பொஸ்னிய சேர்பிய
மாணவனான காவ்ரிலோ பிரின்சிப் என்பவன்
ஆஸ்திரோ ஹங்கேரியின் முடிக்குரிய இளவரசரான
ஆர்ச்டியூக் பிராண்ஸ் பேர்டினண்டை சரயேவோவில்
வைத்துச் சுட்டுக்கொன்றான்.பிரின்சிப் தெற்கு சிலாவி
யப்பகுதிகளை ஒன்றிணைத்து அதனை ஆஸ்திரோ
ஹங்கேரியில்இருந்து விடுவிப்பதை நோக்கமாகக்
கொண்ட இளம் பொஸ்னியா என்னும் அமைப்பின்
உறுப்பினன் சரயேவோவில் நடைபெற்ற இக்கொலை
யைத் தொடர்ந்து மிக வேகமாக நடந்தேறிய நிகழ்வு
களைத் தொடர்ந்து முழு அளவிலான போர் வெடித்தது.
ஆஸ்திரோ ஹங்கேரி இக் கொலைக்குக் காரணமான
வர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனச்
சேர்பியாவைக்கோரியது எனினும் சேர்பியா இதற்குச்
செவிசாய்க்கவில்லை எனக் கருதிய ஆஸ்திரோ
ஹங்கேரி சேர்பியா மீது போர்தொடுத்தது. ஐரோப்பிய
நாடுகளிற் பல கூட்டுப் பாதுகாப்பிற்காக ஒன்றுடன் 
ஒன்று செய்துகொண்டிருந்த ஒப்பந்தங்கள் காரணமா
கவும் சிக்கலானபன்னாட்டுக்கூட்டணிகள் காரணமா
கவும் பெரும்பாலான அந்த நாடுகள் போரில் ஈடுபட
வேண்டி ஏற்பட்டது.

செவ்வாய்கிழமை வாழ்த்துக்கள்